news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மகிழ்ச்சியான தகவல், தங்கம் விலை சரிவு
tv

Also Watch

tv

Read this

மகிழ்ச்சியான தகவல், தங்கம் விலை சரிவு

சென்னை

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold

சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையில், இன்று ஒரு சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய் சரிந்துள்ளது.
ஒரு சவரன் தங்கம் 88 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலையில், ஒரு கிராமுக்கு 375 ரூபாய் குறைந்தது.
ஒரு கிராம் தங்கம் 11 ஆயிரத்து 75 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
வெள்ளியின் விலையிலும் ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்தது.
ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஆபரணத் தங்கத்தின் விலை முன் எப்போதும் இல்லாத வகையில், உயர்ந்து கொண்டே சென்றது. ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை எட்டிவிடும் வாய்ப்பு உள்ளதாக வர்த்தகர்கள் கூறி வந்தனர். அதன் பின்னர் விலையில் ஏற்ற, இறக்கம் இருந்தது.
காலையில் விலை குறைவு:
இந்த நிலையில், இன்று காலையில், அக்டோபர் 28ஆம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.1200 குறைந்து விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்கள் ஓரளவு நிம்மதி அடைந்திருந்த வேளையில், அவர்களை மேலும் மகிழ்விக்கும் விதமாக பிற்பகலில், ஒரு சவரனுக்கு ரூ.1800 குறைந்து விற்பனையானது.
இதன்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.88,600 ஆக இருக்கிறது. ஒரு கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.11,075 ஆக உள்ளது.
கடந்த 10 நாட்களில் மட்டும், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு சுமாராக ரூ.9000 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை குறைந்தாலும், அதிகரிக்கவில்லை என்பதை அறிந்து, வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இதையும் பாருங்கள்... அடியோடு சரிந்த தங்கம் விலை... மக்களுக்கு இன்ப அதிர்ச்சி | Today gold rate | Gold Price

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக புகார் இரவு சாலை மறியலில்

0
11 hrs 55 mins agoshare
திருவொற்றியூர் தொடர் மின்வெட்டு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved