Also Watch
Read this
By: Web Team

ஊருக்குள் முதல்முறையாக வந்த அரசுப் பேருந்தை கண்டு நெகிழ்ந்த கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டம், முல்லையூர் ஊராட்சிக்கு, இத்தனை ஆண்டு காலமாக நேரடி பேருந்து வசதி கிடையாது. முல்லையூர் மக்கள் தங்கள் கிராமத்திலிருந்து அயன் தத்தனூர் அல்லது அருகிலுள்ள தளவாய் கிராமத்திற்கு ஏறக்குறைய 3 கிமீ தூரம் நடந்து, அரியலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் நிலை இருந்து வந்தது.
கிராம பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில். போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இன்று முல்லையூர் ஊராட்சிக்கு வருகை தந்து முல்லையூரில் இருந்து அரியலூருக்கு நேரடி பேருந்து வழித்தடத்தை துவக்கி வைத்தார்.

அப்போது, இளம்பெண் ஒருவர், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் கையைப் பிடித்து "எங்களின் பல நாள் கனவு சார். ரொம்ப நன்றி" என்றவாறு கை குலுக்கி நன்றி தெரிவித்தார்.
அரசுப் பேருந்து வந்ததை கண்டு, கிராம மக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

பயணிகளுக்கு சாக்லேட் வழங்கியதும், நடத்துனர் மற்றும் ஓட்டுநரை கைப்பிடித்து மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்ட காட்சி காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved