Also Watch
Read this
By: Admin News Tamil
குருப் பெயர்ச்சியை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற லட்சார்ச்சனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குருபெயர்ச்சி விழா
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, கடந்த மாதம் 26ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குருபகவான் இடம்பெயர்ந்த நிலையில், திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று ஜூன் 2ஆம் தேதி குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. குருப்பெயர்ச்சியை முன்னிட்டு கடந்த 26ஆம் தேதி தொடங்கிய லட்சார்ச்சனை விழா வரும் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஆலங்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தமிழகத்தின் முக்கிய குரு ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. நவகிரகங்களில் குரு பகவானுக்குரிய பரிகார தலமாக போற்றப்படும் இந்த ஆலயம் சோழர் கால கட்டிடக் கலையின் சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இங்கு ஆபத்சகாயேஸ்வரர் சுவாமி மற்றும் ஏலவார்குழலி அம்மன் அருள்பாலித்து வருகின்றனர். குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளதால், ஆண்டுதோறும் நடைபெறும் குருப்பெயர்ச்சி விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

8 நாட்கள் லட்சார்ச்சனை விழா
குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் ஆன்மீக நிகழ்வே குருப்பெயர்ச்சி. இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. கடந்த 26ஆம் தேதி முதல் இந்த மாதம் 4ஆம் தேதி வரை 8 நாட்கள் லட்சார்ச்சனை விழா நடைபெற்று வருகிறது குருப்பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், கும்பம், தனுசு ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பரிகாரம் மற்றும் சாமி தரிசனம் செய்வதற்காக வலங்கைமான் மட்டுமல்லாது திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved