Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக பேருந்து நிலையம், காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு, மச்சுவாடி உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்தில் பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதேபோல், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழையின் காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved