Also Watch
Read this
By: Web Team

தாய்லாந்தில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ஒன்பது கோடியே 50 லட்சம் மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பேங்காக்கில் இருந்து வந்த பயணி ஒருவரின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, அவர் துணிகளில் மறைத்து வைத்து 9.82 கிலோ எடையிலான உயர்ரக கஞ்சா கடத்தி வந்தது கண்டிபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கஞ்சா கடத்தி வந்த பயணியை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved