news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எச்ஐவி தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி
tv

Also Watch

tv

Read this

எச்ஐவி தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

தஞ்சாவூர்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
hiv awarness

எச்ஐவி மற்றும் பால்வினை நோய் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மனித சங்கிலி மற்றும் பேரணி நடைபெற்றது.
எச்ஐவி இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற நோக்கோடு, மாநிலம் தழுவிய அளவில் அக்டோபர் 12ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக இன்று, கும்பகோணம் ரயில் நிலைய பகுதியில், மன ஆரோக்கியம், இளம் பருவ ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட, தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவியர் 300க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து மனித சங்கிலி அமைத்தனர்.

கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்தியா தலைமையேற்று தொடங்கி வைத்ததுடன், மாணவியர்களுடன் அவரும் கை கோர்த்து மனித சங்கிலி அமைத்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, விழிப்புணர்வு உறுதி மொழி வாசிக்க, அதனை மாணவியர்கள் திரும்ப கூறி உறுதிமொழி ஏற்றனர்.

சார் ஆட்சியர், விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை ஆட்டோ உள்ளிட்ட பொது பயன்பாட்டு வாகனங்களில் ஒட்டியும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

0
0 min agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved