Also Watch
Read this
By: Web Team
சென்னையில், வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றும் பணியினை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் மற்றும் தண்டையார் பகுதிகளில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சி பணியாளர்கள் ராட்சத மோட்டாரை கொண்டு வெளியேற்றி வருகின்றனர். இதனை நேரில் சென்று ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மழைநீரை அப்புறப்படுத்தும் பணியை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved