Also Watch
Read this
By: Web Team

மன உளைச்சல் காரணமாக பணி செய்ய இயலாத சூழ்நிலையால், தனக்கு விருப்ப ஓய்வு அளிக்குமாறு உள்துறை செயலாளருக்கு திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கடிதம் எழுதியுள்ள சம்பவம், காவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
1997 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த பரத் ஸ்ரீனிவாஸ், தற்பொழுது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக தன்னால் தொடர்ச்சியாக பணி செய்ய இயலாத சூழ்நிலை உள்ளதால் விருப்ப ஓய்வு வழங்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved