news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews இரும்பு பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு
tv

Also Watch

tv

Read this

இரும்பு பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு

விழுப்புரம்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLR bullet

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட இரும்பு பீரங்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சென்னை ராம கிருஷ்ணா விவேகானந்தா மிஷன் கல்லூரி வரலாற்று துறை உதவிப் பேராசிரியராக உள்ள அரங்க மாயகிருஷ்ணன் மற்றும் திண்டிவனம் கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரி வரலாற்று துறை முனைவர் ஜெயப்பிரதா மாய கிருஷ்ணன் அடங்கிய குழுவினர், விழுப்புரம் மாவட்டம் வீடூரில் உள்ள வராக நதி மற்றும் தொண்டி ஆறு இணையும் பகுதியான கம்மாளமேட்டில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, தொல்லியல் சின்னங்களாக, சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட தக்கிலி, வரைகோல், அஞ்சரகொல்லி என்னும் பொருட்கள் கிடைத்தன. மேலும், வழுதாவூர் அருகே ஆய்வு மேற்கொண்ட போது வழுதாவூர் கோட்டை அருகே இருக்கக் கூடிய தானிய களஞ்சியம் பக்கத்தில், 19.200 கிராம் எடை கொண்ட இரும்பு பீரங்கி குண்டு கிடைத்துள்ளது.

இது, மூன்றாம் கர்நாடக போரின் போது கோட்டையை தகர்த்த பயன்படுத்தபட்டதாக கருதப்படுகிறது. இந்த குண்டுகள் 18ஆம் நூற்றாண்டை சார்ந்தவை எனவும் வரைகோல், தக்கிலி 2000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டவை என்பதால், இது வரலாற்றின் தொன்மையை காண்பிப்பதாக கூறப்படுகிறது. கீழடியை விட மிகச்சிறந்த நாகரீகமாக, வீடூர் திகழும் என ஆய்வு மேற்கொண்டவர்கள் கூறி உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 36 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved