Also Watch
Read this
By: Web Team

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்படாத நிலையில், அன்னிய நாட்டு பிரஜையை காலவரம்பின்றி தடுத்து வைக்கமுடியாது என சென்னை உயிர்நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், கார்த்திக் பார்த்திபன் மீதான வங்கிக்கடன் மோசடி வழக்கில். மேல் விசாரணையை ஒராண்டில் முடிக்க வேண்டும்என சிபிஐக்கு உத்தரவிட்டது.
சட்டவிரோதமாக பிரிட்டீஷ் வெர்ஜின் தீவில் உள்ள நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்ததுடன், 500 கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக சிவசங்கரனுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
செஷல்ஸ் நாட்டு பிரஜையான கார்த்திக் பார்த்திபன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய கோரி அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்தால் அவர் தப்பிக்ககூடும் என சிபிஐ தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved