Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அரசு விரைவுப் பேருந்தில் தவறவிட்ட 30 சவரன் தங்க நகைகளை போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர். திருச்செந்தூரில் இருந்து வந்த பேருந்தில் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பிரேம், பத்மா ஆகியோர் நகை இருந்த கைப்பையை பேருந்திலேயே தவற விட்டு இறங்கியுள்ளனர்.
சிறிது தூரம் சென்றதும் நகைப்பை இல்லாததை உணர்ந்த இருவரும் பேருந்தின் நடத்துனருக்கு செல்போனில் தகவல் தெரிவித்த நிலையில், ஓட்டுநர் துரைசாமி மற்றும் நடத்துனர் தன்னாசி ஆகியோர் நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved