Also Watch
Read this
By: Web Team

காரைக்கால் அம்மையார் ஆலய மணி மண்டபத்தில், நவராத்திரியை முன்னிட்டு, சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில், நவராத்திரி கொலு தர்பார் நிகழ்ச்சி தொடங்கியது.
கொலு தர்பாரில், வழுவூர் வீரரேட்டேஸ்வரர், பால குஜாம்பிகை, பிரணவ உபதேச காட்சி, லட்சுமி ஹயக்ரீவர் உள்ளிட்ட பல தெய்வங்களை காட்சிகளாக அமைத்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.
நவராத்திரி கொலு தர்பார் கண்காட்சியை, திருவாவடுதுறை ஆதீன ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் துவக்கி வைத்து அருளாசி வழங்கினார்.

விழாவில் ஆலய அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நவராத்திரி விழாவை முன்னிட்டு, கொலு தர்பாரில் பல்வேறு கடவுள் பொம்மைகளும் அழகாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved