Also Watch
Read this
By: Web Team

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அரசு மதுபானக் கடைக்கு எதிரே கள்ளச்சந்தையில் படுஜோராக மது விற்பனை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
கருங்காடு பகுதியில் முதியவர் ஒருவர் ஆங்காங்கே மதுபாட்டில்களை மறைத்து வைத்திருந்து பாட்டில்களை எடுத்து கொடுப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.
140 ரூபாய் விலையுள்ள மது பாட்டில் 90 முதல் 120 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.