Also Watch
Read this
By: Web Team

திருச்சி மாவட்டம் துறையூர் சுற்றுவட்டார பகுதிகளில் விமானங்கள் தாழ்வாக பறந்து செல்வதால், வயல்களில் பணியில் ஈடுபடும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். துறையூர், பச்சபெருமாள் பட்டி, நெட்டவேலம்பட்டி, எரகுடி, தங்கநகர் உள்ளிட்ட கிராமங்களில், பகல் நேரங்களில் சிறிய ரக விமானம் தாழ்வாக பறந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த விவசாயிகள், போலீசாருக்கும் அந்த விமானம் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்கவில்லை என்றும், விமானம் எங்கிருந்து வருகிறது?, எந்த நோக்கத்திற்காக பறக்கிறது என்பது குறித்து குழப்பமும் அச்சமும் நிலவி வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved