Also Watch
Read this
By: Web Team

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஆயிரத்து 500 கோடி நிதி மோசடி தொடர்பான அசல் ஆவணங்களை சேகரிக்கும் பணியை சிபிஐ தொடங்கியது.
பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் அசல் ஆவணங்களை செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பரிவார் டெய்ரீஸ் அண்ட் அலைடு லிமிடெட் மற்றும் பிடிஏ அறக்கட்டளை பெயரில் திரட்டப்பட்ட நிதி, வைப்புத் தொகைகள் தொடர்பாக சிபிஐ வழக்குகளை பதிவு செய்தது.
மோசடி தொடர்பாக பணம் செலுத்திய அசல் ஆவணங்களை சேகரிக்க சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved