Also Watch
Read this
By: Web Team

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பாளையம்பட்டியை சேர்ந்த மூதாட்டி லதா, கடந்த சனிக்கிழமை ரயில் நிலையம் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது செம்பட்டியை சேர்ந்த அடைக்கலம் என்பவர் மூதாட்டியின் கழுத்திலிருந்த 8 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.
புகாரில் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அடைக்கலத்தை கைது செய்து சிறையிலடைத்தனர். போலீசார் விசாரணையில், கடன் பிரச்சனைக்காக அடைக்கலம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved