news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை
tv

Also Watch

tv

Read this

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை

வேலூர்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhurai murugan

வேலூர், காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்பி கதிர் ஆனந்த் வசிக்கக்கூடிய இல்லத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த தகவலையடுத்து அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ரீட்டா உதவியுடன் 5க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வந்த, வெடிகுண்டு மிரட்டலில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்த தகவலை தொடர்ந்து, 1 மணி நேரத்திற்கு மேலாக அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல், வதந்தி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து சோதனையை, போலீசார் முடித்து விட்டுச் சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
3 hrs 51 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved