Also Watch
Read this
By: Web Team

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காடரந்தகுடி கிராமத்தில் அரசு விதிமுறைகளை மீறி 40-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.
பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்ற நிலையில்,
தனியார் பட்டா நிலங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி செங்கல் சூளை மற்றும் கட்டுமான பணிகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதனை கிராம மக்கள் தட்டிக் கேட்ட பொழுது, மரம் வெட்டும் தொழிலாளர்கள் தப்பி ஓடியதால் வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved