Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகே உள்ள காலியிடத்தில் எரிப்பதால் புகை பரவி, மருத்துவமனை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதாக புகார் எழுந்துள்ளது.
புகை பரவுவதால் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் மற்றும் ஆம்புலன்ஸ் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.