news-tamil-logo

3/21/2026, 9:35:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து.. பிப்ரவரி 26,27,28 ஆகிய 3 நாட்களுக்கு கப்பல் இயக்கப்படாது.. மோசமான வானிலை காரணமாக ரத்து
tv

Also Watch

tv

Read this

நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து.. பிப்ரவரி 26,27,28 ஆகிய 3 நாட்களுக்கு கப்பல் இயக்கப்படாது.. மோசமான வானிலை காரணமாக ரத்து

நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

Posted on: Feb 27, 2025 04:17 AM

55

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

வங்கக் கடலில் நிலவும் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று வீசுவதன் காரணமாக,

பிப்ரவரி 26, 27, 28 ஆகிய 3 நாட்களுக்கு நாகை - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு சுபம் கப்பல் நிறுவனம் சார்பில் தினமும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்த நிலையில்,

பயணிகள் கப்பல் போக்குவரத்தை வரும் 28-ம் தேதி வரை ரத்து செய்துள்ள அந்த நிறுவனம்,

மார்ச் 1-ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved