Also Watch
Read this
By: Web Team

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கோவில் கும்பாபிஷேகத்தின் போது வானத்தை நோக்கி வீசப்பட்ட வெடி கீழே விழுந்து வெடித்ததில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பஞ்சலி பகுதியில் உள்ள நல்லாயி அம்மன் கோயிலில் கடந்த மாதம் 10 ஆம் தேதி கும்பாபிஷேகமும், அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜையும் நடைபெற்றது.
நிறைவு நாளில் வானை நோக்கி வீசப்பட்ட பட்டாசு, தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததில், இரண்டரை வயது சிறுமி ஹனிக்காவின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved