Also Watch
Read this
By: Web Team

திருநெல்வேலி, சென்னை இடையே 20 பெட்டிகளை கொண்ட புதிதாக வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. 16 பெட்டிகளை கொண்ட ஊதா நிற வந்தே பாரத்
ரயில் மாற்றப்பட்டு, இன்று முதல் 20 பெட்டிகளை கொண்ட காவிநிற ரயில் நெல்லையிலிருந்து சென்னை புறப்பட்டு சென்றது.
அதி நவீன சொகுசு வசதி, விரைவாக செல்லும் நோக்கிலும், நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. திருநெல்வேலி - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.

காலை 6.05க்கு திருநெல்வேலியில் புறப்பட்டு இந்த ரயில் மதியம் 1.40க்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சென்றடைந்து விடும்.
சுமார் 7.45 மணி நேரத்தில், சென்றடைந்து விடுவதால், பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது.
இன்று காலை 6.05க்கு நெல்லையிலிருந்து இந்த ரயில் சென்னைக்கு புறப்பட்டது. தற்போது, 20 பெட்டிகள் கொண்ட புதிய ரயில் இயக்கப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கை 1440 ஆக உயர்ந்துள்ளது.

ஆயுத பூஜை, விஐயதசமி, தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் இருபது பெட்டிகளை கொண்ட 1440 பயணிகள் பயணிக்க கூடிய ரயிலை இயக்கியது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.