Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர் பேட்டையில் எம்.பி சசிகாந்த் கார் முன்பு மூதாட்டி படுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பென்னலூர் பேட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு மேஜைகள், நாற்காலிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள எம்.பி சசிகாந்த் வருகையளித்தார்.
அப்போது, 5 வருடங்களாக ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பாஸ்கர் கிராமத்திற்கு எந்தவொரு அடிப்படை வசதியையும் செய்துதரவில்லையென,
மூதாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் எம்.பி சசிகாந்த் சென்ற காரை மறித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved