Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்களை வழிமறித்த காட்டு யானையால், வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகமாக வசிக்கின்றன.
கடந்த சில மாதங்களாக, கரும்பு லாரிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒற்றை காட்டு யானை, அவ்வப்போது அந்த வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், ஆசனூர்-திம்பம் இடையிலான வனப்பகுதியில் உலா வந்த யானை அந்த வழியாக வந்த வாகனங்களை ஆக்ரோஷமாக துரத்தியது. மேலும், வழி மறித்து சாலையிலே நின்றதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved