Also Watch
Read this
By: Web Team

அரசு மருத்துவமனைகளில், 108 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
பல்வேறு மாவட்டங்களில், 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருந்து கிடங்குகளையும் அவர் திறந்து வைத்தார். பழங்குடியின மக்களின் மருத்துவ பயன்பாட்டிற்காக 25 அவசர கால ஊர்திகள், 20 நடமாடும் மருத்துவ ஊர்திகளின் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.
நான்கு மாவட்டங்களில் 8 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளையும் அவர் திறந்து வைத்தார். இதோடு 137 கோடியே 31 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 20 சமூகநீதி விடுதி கட்டடங்களையும், 39 கோடியே 29 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் 39 ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கான வகுப்பறை கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved