Also Watch
Read this
By: Web Team

மதுரை மாவட்டம் அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோயில் கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வருடத்திற்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படும் இந்த கோயிலில் உள்ள பதினெட்டு படிகளும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர ஜோதி ஏற்றப்பட்டதை தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில் கதவுகள் சிறிது நேரம் திறக்கப்பட்டது.
அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா என முழக்கமிட்டு வழிபாடு செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved