Also Watch
Read this
By: Web Team

சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழு, செயற்குழுவுக்கு எதிராக அன்புமணி தரப்பினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். ராமதாஸ் தரப்பில் நடத்தப்படும் பொதுக்குழு பாமகவின் பொதுக்குழுவே அல்ல எனவும், கட்சியின் அடையாளத்தையும், கொடியையும் பயன்படுத்த அனுமதி அளிக்கக்கூடாது எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ்தான் என்றாலும், கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை எனவும், கட்சித் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved