news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு

இன்று காலை நிலவரம்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold

சென்னையில், ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து, 90 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கடந்த அக்டோபர் மாதம், ஆபரணத் தங்கத்தின் விலை உச்சபட்சமாக உயர்ந்த நிலையில், இறுதி வாரம் மற்றும் நவம்பர் தொடக்கத்தில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்தது.
இந்நிலையில், இன்று காலை, ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே ஏற்றம் கண்டது.
சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.90,400 ஆக விற்பனை ஆனது.
ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.11,300 ஆக விற்பனை ஆனது. வெள்ளி விலையில், மாற்றமின்றி, ஒரு கிராமுக்கு ரூ.165 ஆக இருந்தது.
கடந்த அக்டோபர் மாதம் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது.
தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு, தங்கத்தின் விலை சற்று குறைய தொடங்கியது.
நவம்பர் மாதத்துக்கு முன்பாக, கடந்த அக்டோபர் இறுதி வாரத்தில், தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது. தங்கம் விலை காலை, மாலை என இரு வேளைகளிலும் அதிகரித்தது. இதனால், நகை வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில் தங்கத்தின் விலை மாறுவது பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தியது.
நேற்று நவம்பர் 7ஆம் தேதி, தங்கத்தின் விலை திடீரென குறைந்து நகை பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளித்தது. 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.11,270க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், நேற்று ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையும் பாருங்கள் - Today Gold Rate | தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை | Gold Price Today | Chennai Gold Rate

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

2
17 hrs 54 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved