Also Watch
Read this
By: Web Team

காணாமல் போன 13 வயது மகளை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்குமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கண்ணீர் மல்க மனு அளித்தனர். மண்மங்கலம் அருகே துவாரபாளையத்தை சேர்ந்த கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி கணேசனின் மகள் அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி முதல் காணவில்லை எனக் கூறப்படுகிறது. வீட்டில் இருந்தவரை காணவில்லை என மறுநாள் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை மகளை கண்டுபிடிக்கவில்லை எனவும், தங்களது மகள் எங்கு எந்த நிலையில் இருக்கிறார் என தெரியவில்லை என்றும் பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved