news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உழவர் சந்தையில் குவிந்த மக்கள், 45 டன் காய்கறிகள் விற்பனை
tv

Also Watch

tv

Read this

உழவர் சந்தையில் குவிந்த மக்கள், 45 டன் காய்கறிகள் விற்பனை

தர்மபுரி

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dharmapuri

புரட்டாசி 3ஆவது சனிக்கிழமை விரதத்தை முன்னிட்டு, தர்மபுரி உழவர் சந்தையில் 45 டன் காய்கறிகள் விற்பனை ஆனது.
புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெரும்பாலான வீடுகளில், பொதுமக்கள் விரதம் இருந்து சாமிக்கு படையலிட்டு வழிபடுவார்கள். இதனால், காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெறும். இதன்படி, தர்மபுரி உழவர் சந்தையில் 45 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்தது. ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்க உழவர் சந்தைக்கு வந்திருந்தனர்.
தக்காளி கிலோ ரூ.12, கத்தரிக்காய் கிலோ ரூ.35, வெண்டைக்காய் ரூ,15, அவரைக்காய் ரூ.50, முள்ளங்கி கிலோ ரூ.20, முருங்கைக்காய் கிலோ ரூ.110 என விற்பனையானது.

தேங்காய், வாழை இலை, வாழைப்பழமும் விறுவிறுப்பாக விற்பனையானது. இதனால், இன்று உழவர் சந்தையில் 44 டன் காய்கறிகள் ரூ.18.45 லட்சத்திற்கு விற்பனையானது. உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க பொது மக்களின் கூட்டம் அலை மோதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
6 hrs 18 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved