Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் உடலை விவசாய நிலத்தில் வீசி சென்று மறைக்க முற்பட்ட நிலத்தின் பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
பூங்குளத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜீவ் காந்தி என்பவர் அவ்வப்போது வனவிலங்குகளை வேட்டையாட செல்வதாக கூறப்படும் நிலையில், வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் கை, கால்கள் கயிறால் கட்டப்பட்டு அவரது சடலம் காணப்பட்டது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சாந்தி என்பவரின் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை மறைக்க அவரது உடலை கயிறால் கட்டி வீசி சென்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved