Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் வடமாநில தொழிலாளி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுன் பிரசாத் யாதவ், உடன்குடி அனல் மின் நிலைய கட்டுமான பணியில் ஒப்பந்த தொழிலாளியாக கடந்த இரண்டு வருடமாக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று குலசேகரபட்டினம் சென்று வருவதாக சக தொழிலாளர்களிடன் கூறி சென்றவர், சிறிது நேரத்தில் நிறுவன அதிகாரி ஜெகதீசனை அழைத்து, தன்னை அடையாளம் தெரியாத சிலர் அடித்து பணம் கேட்பதாக கூறியுள்ளார்.
ஜெகதீசன் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அரசு டாஸ்மாக் கடையின் பின்புறம் அர்ஜூன்யாதவின் உடலை பாதி எரிந்த நிலையில் மீட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved