Also Watch
Read this
By: Web Team

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலையத்தில் அதிமுக பிரமுகரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக நிர்வாகியான ரவி விபத்து தொடர்பாக ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுக்க சென்றுள்ளார்.
அப்போது அந்த காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ள சிலம்பரசன் தன்னை சந்திக்காமல் எப்படி உள்ளே செல்வாய் என ஆபாரசமாக பேசி, ரவியை தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி பேசும் பொருளானது.
இது குறித்து விசாரணை நடத்திய ஸ்ரீபெரும்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் பரிந்துரையின் பேரில் சிலம்பரசன் ஆயதப்படை நெடுஞ்சாலை ரோந்து பணிக்கு மாற்றப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved