Also Watch
Read this
By: Web Team

தமிழகத்தில், 2 நாட்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல், தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், ஆகஸ்ட் 15, 16ஆம் தேதிகளில், தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்:
வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
ஆகஸ்ட் 19ம் தேதி வரை தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, வங்க கடல், அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved