news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏழு நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை தகவல்
tv

Also Watch

tv

Read this

ஏழு நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை தகவல்

சென்னை

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tn rain alert

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் மையம் கொண்டு, வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (19ஆம் தேதி) அதிகாலை தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில், கோபால்பூருக்கு அருகே கரையை கடந்தது.

இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை தெற்கு ஒடிசா உட்பகுதிகளில் நிலவுகிறது. இது, மேலும், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலு குறையக்கூடும்.

மழை நிலவரம்:

தென்னிந்திய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத் – வடக்கு கேரள பகுதிகளுக்கு அப்பால், வடகிழக்கு – தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நாளை முதல் வரும் 25ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மத்திய மேற்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், கொங்கன் - கோவா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு - வட கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும்,
கர்நாடகா - கேரள கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும், சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகள், ஆந்திரா – ஒடிசா கடலோரப்பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கும், மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
6 hrs 33 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved