Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக சூறைக் காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்யும் நிலையில், கடலோரத்தில் காற்றின் வேகத்தால் அலைகளில் சீற்றம் அதிகமாக உள்ளது.
உயரமான அலைகள் எழுவதால், ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான நாட்டுப்படகு மீனவர்கள் மூன்றாவது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.
படகுகளை கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ள மீனவர்கள், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : ஆழ் கடலில் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு... கடலில் காற்றாலை திட்டம் போன்றவற்றிற்கும் எதிர்ப்பு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved