Also Watch
Read this
By: Web Team

மயிலாடுதுறையில், கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு பம்பை, உடுக்கை, மேளம், நாதஸ்வரம் உள்ளிட்ட கருவிகளை வைத்து ஆயுதபூஜை சிறப்பு
வழிபாடு மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை திருஇந்தளூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலயத்தில் கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள் சார்பில், ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாட்டுப்புற கலைஞர்களின் கருவிகளான பம்பை, உடுக்கை, நாதஸ்வரம், தவில், காளி நடன ஒப்பனை பொருட்கள், பறை இசை உள்ளிட்டவற்றை வைத்து, சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் நாட்டுப்புற கலைஞர்கள், நாதஸ்வரம் மற்றும் மேளம் உள்ளிட்டவற்றை வாசித்து சுவாமியை வழிபட்டனர்.