Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே வேலப்பூண்டி கிராமத்தில், சுமார் ஒரு கிமீ தூரம் வரை குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையில் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால், நடந்து செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாக கூறிய கிராம மக்கள், இருசக்கர வாகனங்களும் விபத்தில் சிக்குவதாக தெரிவித்தனர். மழை காரணமாக தற்போது குளம்போல் தண்ணீர் தேங்கி சேறாக காணப்படும் சாலையில் கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.