Also Watch
Read this
By: Web Team

ஆடிப்பூரம் திருநாளையொட்டி, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சாரதாம்பாள் அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவையொட்டி, 1 லட்சத்து 25 ஆயிரம் வளையல்களால் கோவில் கோபுரம் முதல் அம்மன் சந்நிதி வரையிலான பகுதி வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டது.
தொடர்ந்து, சாரதாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தியும் தரிசனம் செய்தனர்.