Also Watch
Read this
By: Web Team

இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை தலைமையிடமாக கொண்டு ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வலியுறுத்தி கடையடைப்பு மற்றும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். கடந்த வாரம் சாயல்குடி மட்டும் ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்கபட்டதால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அறிவிக்க கோரி கீழசெல்வனூர் முதல் இதம்பாடல் வரை 200க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved