Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே அரசு பேருந்தில் பட்டாசு வெடித்த பள்ளி மாணவர்களை, போலீசார் எச்சரித்து அனுப்பினர். ஒடுகத்தூரில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்ற அரசு பேருந்தில், பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி அடாவடியில் ஈடுபட்டு வந்ததால் நடத்துநர் கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் மாணவர்கள் திடீரென பேருந்துக்குள் பட்டாசு வெடித்ததால், அதிர்ச்சியடைந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். இதனை தட்டிக்கேட்ட நடத்துநருடன் மாணவர்கள் தகராறில் ஈடுபட்டதால், பேருந்தை வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் நிறுத்தி போலீசாரிடம் நடந்தவற்றை கூறவே, அவர்கள் மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.
"இதுபோன்று நடந்து கொள்ள கூடாது. இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று போலீசார் கூறி அனுப்பி வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved