Also Watch
Read this
By: Web Team

அரசு மதுபானக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை திரும்ப பெறக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பேருந்து நிலையம் எதிரில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் ஒரு மணிநேரம் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். திரும்ப பெறப்படும் காலி பாட்டில்களை வைக்க போதிய இடம், அதற்கு புதிதாக ஊழியர்கள், கூடுதலாக டாஸ்மார்க் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால், மது பிரியர்கள் மது வாங்க முடியாமல் காத்துக் கிடந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved