Also Watch
Read this
By: Web Team

பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கைது செய்து சிறையில் அடைத்தது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் துப்பாக்கி சப்ளை செய்ததாக, பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்ஸிஸ் சுதாகரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே தன்னை கைது செய்ததையும், சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்யக் கோரி அலெக்சிஸ் சுதாகர் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, அலெக்ஸிஸ் சுதாகரை கைது செய்து, சிறையிலடைத்த உத்தரவு செல்லாது என உத்தரவிட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved