Also Watch
Read this
By: Web Team

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மூடப்பட்டுள்ள பாசன வாய்க்கால்களை தூர்வாரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விளந்திட சமுத்திரம், பாதரக்குடி, சேந்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பயிர்களில் தற்போது கதிர் வரும் நிலையில், வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் வயல்கள் வெடிப்பு ஏற்பட்டு பயிர்கள் காய்ந்து போகும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே காயும் பயிர்களை காப்பாற்ற நீர் வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.