Also Watch
Read this
By: Web Team

மறைந்த ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.
இதே போல் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே திமுக எம்பி கனிமொழி, இல.கணேசன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved