news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நஷ்டம் உங்களுக்குத்தான்...
tv

Also Watch

நஷ்டம் உங்களுக்குத்தான்...

விருதுநகர்

53

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vnr 2

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வை தேர்ந்தெடுத்து அனுப்பினால் உங்களுக்கு வேலை நடைபெறும். வேற கட்சி எம்.எல்.ஏ வை அனுப்பி வைத்தாள் நஷ்டம் உங்களுக்குத்தான் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் ரூ.45 கோடி மதிப்பில் சுற்றுச்சாலை அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் சுற்றுச்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டு நிலம் கையகப்படுத்த ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த அமைச்சர்
இதற்காக கிருஷ்ணன் கோவில் சாலையில் இருந்து அர்ச்சுனாபுரம் சாலை, கூமாப்பட்டி சாலை, தாணிப்பாறை சாலை வழியாக அழகாபுரி சாலையை இணைக்கும் வகையில் 5.13 கிலோ மீட்டர் தொலைவுக்கு 30 மீட்டர் அகலத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் 10 மீட்டர் அகலத்தில் 3 பெரிய பாலங்கள், 25 சிறு பாலங்கள், 3 ரவுண்டானா உடன் சாலை அமைக்கும் பணிக்கு ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலை அமைக்கும் பணியை வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

சுற்றுச்சாலை பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும்
தொடக்க விழாவில் பேசிய அமைச்சர், வத்திராயிருப்புக்கு சுற்றுச்சாலை வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை என்றும் ரூ.45 கோடி மதிப்பில் அமைக்கப்படும் சுற்றுச்சாலை பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும் என கூறினார். இதன் மூலம் நகர் விரிவடைவதுடன் நிலத்தின் மதிப்பு உயரும், அடுத்து அமையும் திமுக ஆட்சியில் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என உறுதியளித்தார்.

கோட்டையூர் - அழகாபுரி சாலை விரிவாக்கம்
கோட்டையூர் - அழகாபுரி சாலை ரூ.28 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறிய அமைச்சர் அதே போல் எரிச்சநத்தம் - விருதுநகர் சாலையும் விரிவாக்க செய்யப்பட உள்ளதாகவும் கூறினார். உங்கள் பிரச்சினைகளை எங்களிடம் சொல்வதற்கு ஒரு ஆள் வேண்டும். அதற்கு ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ வெற்றி பெற்றால் தான் திட்டங்கள் நிறைய வரும் என்றார். இவ்விழாவில் அரசு அதிகாரிகள்,கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Link
ஆண் குழந்தை ரூ.30,000..!

ஆண் குழந்தை ரூ.30,000..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இது சட்டசபையா, சண்டை சபையா? பிரேமலதா கேள்வி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved