Also Watch
Read this
By: Web Team

ஆத்தூர் அருகே சோளக்காட்டில் பதுங்கியிருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, வனத்துறையினரிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூர் வடக்கு காலனி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி முருகேசன் என்பவருடைய சோளக்காட்டில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக தெரிய வந்தது.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சோளக்காட்டில் பதுங்கியிருந்த 10 அடி நீளமுள்ள மலை பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம்
ஒப்படைத்தனர். மலை பாம்பை மீட்ட வனத்துறையினர் அங்குள்ள காப்புக் காட்டில், அதனை விடுவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved