news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews என்கவுன்டரில் ரவுடி உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

என்கவுன்டரில் ரவுடி உயிரிழப்பு

பெரம்பலூர்

47

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறையில் ரவுடி கொட்டு ராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ரவுடி வெள்ளைக்காளியை போலீசார் அழைத்து சென்ற போது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவத்தில் அதிரடி நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர்.

வெள்ளைக்காளி மீது வெடிகுண்டு வீச்சு

கடந்த 24ஆம் தேதி பெரம்​பலூரில் போலீ​ஸ் வேனில் அழைத்​துச் செல்லப்பட்ட பிரபல ரவுடி வெள்​ளைக் காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்​ற சம்பவத்தில், கொட்டு ராஜா சம்மந்தப்பட்டிருந்தார். குற்ற வழக்​கு​கள் தொடர்​பாக, ரவுடி வெள்ளைக் காளியை, திண்டுக்கல் மற்​றும் புதுக்​கோட்டை நீதி​மன்​றங்​களுக்கு போலீஸார் அழைத்​துச் சென்​று​விட்டு மீண்​டும் சென்னைக்கு வேனில் அழைத்​துச் சென்று கொண்​டிருந்​தனர். அந்த வேனில் வெள்ளைக் காளி மற்​றும் 10 போலீ​ஸார் இருந்தனர். அப்போது பெரம்​பலூர் மாவட்​டம் எறையூர் சுங்​கச்​சாவடி அருகே வேனை நிறுத்​தி, ஒரு ஓட்​டலில் சாப்​பிடு​வதற்​காக வெள்​ளைக் காளி​யுடன் போலீ​ஸார் நடந்து சென்றனர். அப்​போது போலீஸ் வாக​னத்தை பின்​தொடர்ந்து 2 கார்​களில் வந்த 15 பேர் கொண்ட கும்பல், திடீரென வெள்​ளைக் காளி மீது நாட்டு வெடிகுண்​டு​களை வீசி​யது. இதில், காளி அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பி​னார். இதில் 3 போலீ​ஸார் காயமடைந்​தனர்.

ஐந்து தனிப்படை தேடுதல் வேட்டை
இந்த சம்பவத்தை அடுத்து, நாட்டு வெடிகுண்டு வீசிய கும்​பலை பிடிக்க 5 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​ன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொட்டு ராஜா என்ற ரவுடியை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை பெரம்பலூர் - திருமாந்துறை வனப்பகுதியில் பதுக்கி வைத்துள்ளதாக தெரியவந்தது. இவற்றைக் கைப்பற்ற போலீஸார் அங்கு கொட்டு ராஜாவை அழைத்து சென்றுள்ளனர்.

போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயற்சி
அப்போது, காவல் துறை வாகனம் மீது வெடிகுண்டு வீசியும், போலீஸ் எஸ்ஐ சங்கரை அரிவாளால் வெட்டிவிட்டும் தப்பிக்க அவர் முயற்சித்துள்ளார். இதையடுத்து காவல் துறை ஆய்வாளர் நந்தகுமார் கொட்டு ராஜாவை துப்பாக்கியால் சுட்டதில், அவர் உயிரிழந்தார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
2 குடும்பங்களுக்கு இடையேயான பகை

2 குடும்பங்களுக்கு இடையேயான பகை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

3
13 hrs 39 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved