Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரத்து 124 கன அடி நீர் திறக்கப்படுவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கெலவரப்பள்ளி அணை முழுக் கொள்ளளவை நெருங்கியதையடுத்து, அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரி நீராக திறக்கப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரிக்கும் நிலையில், நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved