Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து தொடர்ந்து மூன்றாவது நாளாக விநாடிக்கு ஆயிரத்து 348 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆற்றின் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அணையில் இருந்து குவியல் குவியலாக ரசாயன நுரைகள் பொங்கி செல்வதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved